Thursday, July 9, 2015


கிரகங்கள்உருவாக்கும் நோய்கள்
சூரியன்கண் நோய், தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, இதய நோய், பித்தம், தாகம், வெய்யில் வெப்பத்தாக்கு நோய்.
சந்திரன்பாலியல் நோய்கள், தோல் நோய், குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், கண் நோய்கள், வீக்கம், இரத்தம் அசுத்தங்கள், பகட்டு,
வயிறு வலி, பைத்தியம், குளிர் கபசுரம்.
செவ்வாய் (குஜன்)விபத்துகள், வெட்டுக் காயங்கள், விந்து இழப்பு, நாய்க்கடி, இரத்த குறைபாடு, இரத்த இழப்பு, இரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், இரத்த சோகை, பித்த நீர், தாகம்
புதன்வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தையின்மை, குடல் கோளாறு, தோல் நோய்கள், மன நிலை தடுமாற்றம், படை, சொறி, சிரங்கு, தொண்டைப் புண், டான்சில்கள்,
ஊமை, வழுக்கை, வட்டப் படை, வெண் குஷ்டம்.
வியாழன் (குரு)குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலை.
சுக்கிரன்பாலியல் நோய்கள், கருப்பை கோளாறுகள், கண் நோய்கள், சளி மற்றும் சுவாசம், நீரிழிவு, இரத்த சோகை, தோல் நோய், கருப்பை நோய்கள், கருக்கலைப்பு.
சனிசோம்பல், வாயு தொல்லைகள், வாத நோய், கீல்வாதம், குறைபாடுள்ள பேச்சு, பல் வியாதி, அஜீரணம், புண், ஆஸ்துமா.
ராகுகண்புரை, பல் வியாதிகள், அம்மை, தொழுநோய், தற்கொலை, உடல் வலி, திக்குவாய், மண்ணீரல் வியாதிகள், வாத நோய், திடீர் மரணம், கொலை, விபத்துக்கள், பாலியல் முறை கேடு, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், மிருகங்களுடன் பகை, பாம்பு கடி, பைத்தியம்..
கேதுவெட்டுக்கள், காயங்கள், தொழுநோய், படை மற்றும் புண்கள், தற்கொலை, வயிறு வலி, சிறிய அம்மை, பெரிய அம்மை, புற்றுநோய், திடீர் மரணம், கொலை, பசி, தோல் வெடிப்புகள்,
பாம்புக்கடி, வைரஸ் காய்ச்சல், கட்டி.


கிரகங்கள்சம்பந்தமான விலங்குகள்
சூரியன் புலி, மான், சிங்கம், காளை.
சந்திரன்பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள், ஊர்ந்து செல்லும் விலங்குகள், மீன், முயல், ஒரு வகை மான்.
செவ்வாய் (குஜன்)எறும்புகள், நாய், ஆண் ஆடு, குள்ளநரி, குரங்கு, செம்மறி ஆடு, கொம்பு விலங்குகள், எருது.
புதன்பூனை, குள்ளநரி.
வியாழன் (குரு)பசு மாடு
சுக்கிரன்குதிரை.
சனிஆடு, எருமை, கழுதை, கரடி, பன்றி.
ராகுபாம்புகள், ஊர்வன, ஓநாய், கழுதை, கொசு, வண்டு, பூச்சி, பல்லி, பன்றி.
கேதுபாம்புகள், நாய்கள், புழுக்கள், எலிகள், யானை, மான், ஆண் கலைமான், கொம்பு விலங்குகள், கீரிப்பிள்ளை, அணில்.


கிரகங்கள்பறவைகள்
சூரியன்வாத்து
சந்திரன்கொக்கு, கௌதாரி
செவ்வாய் (குஜன்)சேவல், கழுகு.
புதன்கிளி, கருடன்
வியாழன் (குரு)புறா, அன்னம்
சுக்கிரன்மயில்
சனிகாகம், குயில்
ராகுஆந்தை, தேனீக்கள், கொசு, குருவி.
கேதுகுயில், கழுகு


கிரகங்கள்தாவரங்கள்
சூரியன்ஆக் மரம், அடர்ந்த மரங்கள், கோதுமை பயிர்கள், பில்வா மரம், ருத்ராட்க்ஷம்.
சந்திரன்வாழை மரம், மோளக் குச்சி, கரும்பு, சந்தன மரம், நெல் பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ மூலிகைகள்.
செவ்வாய் (குஜன்)வேப்ப மரம், முள் மரம், பாரசீக லீலாக், அலரி
புதன்துளசி, கொடிகள், பச்சை இலைகள், நெல்லி
வியாழன் (குரு)தென்னை மரம், வெற்றிலைகள், இனிப்பு பழ மரங்கள், அரசமரம், ஆப்பிள் மரம், மலர் செடிகள்.
சுக்கிரன்மா மரங்கள், எலுமிச்சை மரங்கள், புளிப்பு சுவை பழ மரங்கள், ஆரஞ்சு, திராட்சை, சிறு நெல்லிக்காய், புளி, நெல்லி, பைன் ஆப்பிள்
சனிமூங்கில், பனை மரங்கள், கசப்பான பழ மரங்கள், எண்ணெய்த் தாவரங்கள், சூரியகாந்தி, எள், கடுகு.
ராகுகருவேலம், மர ஆப்பிள், சர்பகாந்தி
கேதுஆலமரம், அத்தி மரம், அசோக மரம், கற்றாழை, கோரைப்புல்.


கிரகங்கள்உடலின் பாகங்கள்
சூரியன்ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், மோதிர விரல், எலும்பு.
சந்திரன்ஆண்களுக்கு இடது கண், பெண்களுக்கு வலது கண், மார்பகம், உதரம், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இரத்தம்.
செவ்வாய் (குஜன்)பற்கள், தசை, இரத்தத்தில் உள்ள சிகப்பு செல்கள், எலும்பு மஜ்ஜை, இருதய பகுதி, புருவம், விறைகள், தண்டு வடம், மூக்குத் தண்டு.
புதன்சுண்டு விரல், கழுத்து, தொண்டை, தோல், நாக்கு, நாபி, உணவுக்குழல், நுரையீரல், கை, தலை, தோள்பட்டை, கைகள்.
வியாழன் (குரு)தொடைகள், ஆள்காட்டி விரல், மூளை, மூக்கு, நாசி, சதை, கொழுப்பு
சுக்கிரன்கருப்பை, கன்னங்கள், முகம், விந்து.
சனிபாதம், குதிக்கால், கன்னம், நடுவிரலை, முழங்கால்கள், இறைப்பை, முழங்கால், பிட்டம், தோல்.
ராகுபெருங்குடல், உதடுகள், வாய், காது, மலக்குடல், யோனி, அதிகமான வலி, அலர்ஜி
கேதுஆசனவாய், தாடி, நகம், முடி, ஆண்குறி, மீசை, நரம்புகள், வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல் 


கிரகங்கள்மூலிகைகள்
சூரியன்குங்குமப்பூ, மிளகு, இஞ்சி, கோதுமை, ஏலக்காய், கிராம்பு, கறுவா
சந்திரன்உப்பு, அரிசி
செவ்வாய் (குஜன்)சிகப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, துவரம் பருப்பு
புதன்பயத்தம் பருப்பு
வியாழன் (குரு)தேன், தேங்காய், வெற்றிலை பாக்கு, நெய், கடலை பருப்பு்
சுக்கிரன்சர்க்கரை, பீன்ஸ், மஞ்சள், அம்பர், கஸ்லுரி
சனிஎண்ணெய், கடுகு, எள், காபி கொட்டை, தேயிலை, புகையிலை
ராகுஉளுத்தம் பருப்பு்
கேதுகொள்ளு


கிரகங்கள்வீட்டு உபயோகப் பொருட்கள்
சூரியன்விளக்கு, ஜன்னல்
சந்திரன்நீர் குழாய் மூடி, சோப்பு, மண்ணெண்ணெய், ஐஸ் பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தண்ணீர் குழாய்
செவ்வாய் (குஜன்)ஊசிகள், அடுப்பு, மின்சார அடுப்பு, புகயில்லா அடுப்பு, முட் கரண்டி, சீப்பு, சலவைப் பெட்டி,
மின்னடுப்பு (Heater), மாவு அரைப்பான், கலவை (Mixer), மோட்டார் மற்றும் தீப்பெட்டி, கத்திகள், இடுக்கி
புதன்புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், சுவர் ஓவியங்கள், புத்தக அலமாரிகள், படிப்பு மேசை
வியாழன் (குரு)கடவுளர்களின் புகைப்படங்கள், தெய்வங்களின் படங்கள், பூஜை பொருட்கள் (மணி, அகர்பத்தி பீடம், தூப பாத்திரம், மெழுகுவர்த்தி பீடம்)
சுக்கிரன்கட்டில், படுக்கை, பாய், துணிகள், கண்ணாடி மேஜை, மேசை, சோபா செட், மலர் குடுவை, சரவிளக்கு, பல்லக்கு, தலையணை, படுக்கை விரிப்பு, ஒப்பனை, கண்ணாடி, அலங்காரப் பெட்டி, நகைப்பெட்டி, பணம் பெட்டி, அலமாரி
சனிபெட்டி, கொள்கலன், பைகள், சவுட்டி, குப்பை தொட்டி, உணவு உண்ணும் மேசை.
ராகுகோணிப்பை, விளக்குமாறு, குடை, பெரிய பாத்திரங்கள், போர்வை, தொலைக்காட்சி, ரேடியோ செட், விசிபி, விசிஆர், கணினிகள், திரைச்சீலைகள்
கேதுகயிறு, செயின், வர்த்தி, மெழுகுவர்த்தி, நூல், ஊஞ்சல், கம்பி, சரம், தொலைபேசி, தொட்டில், தையல் இயந்திரம், மண் பானை.


கிரகங்கள்பொதுத் தன்மைகள்
சூரியன்தெய்வீகம், நம்பகமானது, நிதிவழங்குவது, கெளரவமானது, திறனான நிர்வாகி, கருணை மற்றும் பிரபலது, தாராளமானது.
சந்திரன்சலன புத்தி உள்ளது, வஞ்சகமானது, கலை, கற்பனை, அறக்கட்டளை, மாற்றங்கள் விரும்புவது. சுற்றுலா விருப்பம், வானிலை, ஒழுக்கம் கெட்டது.
செவ்வாய் (குஜன்)ஈகோ கொண்டது, துணிச்சலானது, பிடிவாதம், கர்வம், மூர்க்கத்தனமானது, உணர்வு, ஆதிக்கம் செலுத்துவது, சுயநலம், ஊதாரி, சண்டையிடுவது, முட்டாள், முகத்துதி, காதலில் விழுவது, கோபம், பிடிவாதம், விரைவாக மாறுவது,
புதன்அறிவார்ந்தது, நட்பு,அறிவாற்றல் மற்றும் வேடிக்கையானது, காதல் கொண்ட தன்மை,சதி, இராஜதந்திரம்,கணக்கு போடுவது, மென்மையான பேச்சு, பாரபட்சமானது, பிரித்துப் பார்ப்பது,ஏற்கக் கூடிய செய்கை, வாய்ப்புகள்.
வியாழன் (குரு)மதவாதி, மரியாதை, மதிப்பிற்குரியது, மண்புமிக்கது, சுதந்திரமானது, பணிவானது.
சுக்கிரன்கவர்ச்சியானது, மது அடிமை, சுவையான உணவு பிடிக்கும், சொகுசு பிடிக்கும், கலை, உணர்ச்சி மிக்கது.
சனிசோம்பேறித்தனம், பிடிவாதம்.
ராகுதிருட்டுத்தனம், துணிச்சலானது, தீரச்செயல், செயல்பாடு.
கேதுகஞ்சன், தத்துவஞானி, இயற்கையின் குற்றம் உணர்வது, மதம், சந்நியாசி, பக்கீர்கள்.


கிரகங்கள்தொழில்கள்
சூரியன்அரசியல்வாதிகள், மருத்துவர்கள், நகை ஆசாரி
சந்திரன்பால்காரர், பால்காரி, விவசாயி, புல் விற்பனையாளர், மருத்துவச்சி, செவிலியர், சலவைக்காரர், ரொட்டி செய்பவர், கூவி விற்பவர், படகோட்டி, சமையல்காரர், உலர் சலவைக்காரர் பணியாளர், மருந்து ஆளுனர், கப்பலோட்டி, தகவல் சொல்பவர், பயண முகவர், மாலுமி, முத்து குளிப்பவர்
செவ்வாய் (குஜன்)பொறியாளர், கசாப்புக் கடைகாரர், அறுவை சிகிச்சையாளர், பல் மருத்துவர், காவலர், தச்சர்,
மெக்கானிக், கொல்லன், சிற்பி, நாவிதர், குயவர், இயந்திரம் இயக்குபவர், தீ அனைப்பாளர், சிப்பாய்
புதன்செய்தி தாள் விற்பனையாளர், ஆசிரியர், நாவலாசிரியர், எழுத்தாளர், ஆசிரியர், ஓவியர், உரிமையாளர், தொகுப்பாளர், தபால்காரர், தரகர், வரைவாளர், இன்ஸ்பெக்டர், தேர்வாளர், வெளியீட்டாளர், பிரிண்டர், ஆசிரியர், ஏடு கட்டுபவர், புத்தக விற்பனையாளர்கள், பொது வணிகர், பத்திரிகையாளர், எழுத்தர், கணக்காளர், கணிதவியலாளர்கள், பேச்சாளர், தூதர், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்பவர், காற்று மற்றும் நிலம் மூலம் போக்குவரத்து செய்பவர்
வியாழன் (குரு)குருக்கள், மேலாளர், அமைச்சர்கள், வழக்கறிஞர், நீதிபதிகள், வங்கியாளர்கள், கோவில் தொழிலாளர்கள்
சுக்கிரன்கலைஞர்கள், கருவூலத்தார், நகைக்கடையாளர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர், நடன கலைஞர், நாடக நடிகர்கள், விபச்சாரி, மாது, வாசனை திரவிய விற்பனையாளர்.
சனிகாவலாளி, துடைப்பாளர், வேலைக்காரன், துப்புரவு செய்பவர், செருப்பு தைப்பவன், சுரங்க தொலிலாளி, செங்கல் அறுப்பவர்.
ராகுகாலணி தயாரிப்பபவர், மாந்திரீக வித்தைக்காரர், கூலியாள், கார் ஓட்டுனர்கள், மோளம் அடிப்பவர், சுமை தூக்குபவர், ஷூ பாலிஷர், கந்தல் துணி பொருக்குபவர், ரிக்க்ஷா ஓட்டி, சுமை தூக்கும் மனிதன், கல் உடைப்பவர், கல் குவாரி தொழிலாளர்கள், தோட்டக்காரர்கள், கட்டிட தொழிலாளர்கள், வாகன துடைப்பாளர்கள், மரம் வெட்டிகள், கொள்ளையர்கள், ஜோப்படி திருடர்கள், திருடர்கள், விஞ்ஞானிகள், புகைப்பட கலைஞர்கள், நடிகர்கள், எரிவாயு
ஏஜெண்ட், பழைய பொருட்கள் வாங்குபவர் மற்றும் விற்பவர், வானொலி மற்றும் தொலைக்காட்சி பழுதுபார்ப்பவர்.
கேதுமருத்துவர், பூசாரி, மீனவர், நெசவாளர், தையல்காரர், பின்னல் வேலையாளர், ஜோதிடர்கள், மறை சாஸ்திரி, பாம்பாட்டி, நம்பிக்கை மூலம் குணப்படுத்துபவர்கள், சுவாசம் மூலம் குணப்படுத்துபவர்கள், தெய்வீகம் மூலம் குணப்படுத்துபவர்கள் , ஜகதகுரு, வேட்டைக்காரர்கள், பிச்சைக்காரர்கள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மின் கம்பியாலர், இயற்கை மூலிகைகள் விற்பனையாலர், மட்பாண்டம் செய்பவர்,
ஓடுகள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்.


கிரகங்கள்காரகத்துவம்
சூரியன்தந்தை, மகன், அரசன், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதல்வர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மா, கடவுள், பெயர் & புகழ், வெளிச்சம், தலைநகரம், அதிகாரம், அரண்மனை, வலது கண்,வலது பக்கம், ஹவுஸ் வலது பக்க ஜன்னல்.
சந்திரன்அம்மா, பெண், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஹோட்டல் தொழில், பால் பண்ணை, ஆடம்பரமான பொருட்கள்,பயனங்கள், விவசாயம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், மளிகை கடை, மருத்துவ கடை, மார்பகம், வயிறு, சிறுநீர் பாதை, இடது கண், வீட்டின் இடது பக்க ஜன்னல்,குளியல் அறை & மலசலம் கழிக்கும் இடம், தண்ணீரால் நிரம்பிய இடங்கள், கடல், ஏரி, ஆறு, மனம், இடப்பெயர்ச்சி, இடம் மாற்றம், குங்குமம், கலை, திரவ பொருட்கள், உணவு பொருட்கள், மேகங்கள், மழை,திருடன், விபச்சாரம், செய்தி, இயக்கம், ஒளி,திருட்டுத்தனமான செயல்பாடுகள், ஜோதிடம்,வேதங்கள், மருத்துவம், துணிகள்.
செவ்வாய் (குஜன்)2ம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், பாதுகாப்பு படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற்சங்க தலைவர்,அறுவ சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, ஆற்றல் மீட்டர், மின்மாற்றி, மின் மோட்டார்ஸ், ஹீட்டர்கள், கற்கள், தூண்கள், வீட்டு விட்டங்கள், பூமி, மலைத் தொடர், மலை, பாறைகள், சுரங்கங்கள், உலோகங்கள், ஈட்டி, தோட்டாக்கள், எதிரி, வன் பொருள், கத்தரிக்கோல், முக்கோண வடிவம், சக்தி, ஊசி, கத்தி, முள், அம்பு, இயந்திரங்கள், ஆயுதங்கள், விவசாயம்.
புதன்மாமா, மாமனார், 3ம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், பாய் நண்பர், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, கணக்காளர், கணக்காய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,விஞ்ஞானிகள், ஆராய்ச்சி பொறியாளர், மளிகை கடை, கைகள், கழுத்து, தோள், தோல், நெற்றி,
மொழி, தொண்டை, சுவர் பிளாஸ்டரிங், பார்வையாளர் அறை, படிக்கும் அறை, கார்டன், பூங்கா, நிலம், கல்வி, வர்த்தகம், அழகு, புதைசேற்று சுவர்கள், பயிர்கள், இலைகள், தகவல், பதிவு, பேச்சு, சொற்றிரம், அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள், ராஜதந்திரம், தந்திரம், மென்மையான விஷயங்கள், மண்,
வியாழன் (குரு)ஜீவகாரகர் (சொந்தம்), தொப்பை (குடல் பகுதி), மூக்கு, கொழுப்பு,தொடை, பாதம், பறிப்பு,வீட்டின் கடவுள் அறை, நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், தேன், கடவுள், மாடு, கௌரவம்,பெருமரியாதை, மரியாதை,உண்மை,பொறுமை, அடக்கம்.
சுக்கிரன்சகோதரி,மனைவி,மகள்,மைத்துனி,விபச்சாரி,விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, ஃபேன்சி ஸ்டோர்ஸ், நிதி, வங்கி, பாடல், நகை கடை, பணக் கடன், மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், சுந்தரமானது, இனிப்பு, போதை, அழகான தோற்றம், அழகு, இரகசிய விடயங்கள், நடனம் அரங்கு, சினிமா திரையரங்கு, மகளிர் குழு.
சனிமூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் வேலைக்காரன், தொழில்,கேரியர், வேலை, சின், பாதம், பிட்டம், ஆசனவாய்,முட்டிகள், முழங்கால், செரிமானபை, வீட்டின் சேமிப்பு அறை, டைனிங் ஹால்,சாலை,காற்று சம்பந்தமான நோய்கள்,உல்லன் துணிகள்,இரும்பு,ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல் சூளையாளர், சூதாட்டம்,எண்ணெய் சுரங்கம்.
ராகுதந்தைவழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள்,மின்னணுவியல், வான் பயணவியல்,நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி,பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது,உதடுகள், குடல், மலக்குடல், விரைகள், முதன்மை நுழைவாயில்,பழைய வீடு, பாழடைந்த சுவர்,, சுவற்றில் விரிசல், இருண்ட அறை, பெரிய மண்டபம், கோபுரம்,முட்டை வடிவம், தனிமையான பகுதி,பரந்த சாலை, சுற்று வட்டம்,வட்ட வடிவம், இருள்,உடல்நலத்தை கவனிப்பு,மாயத்தோற்றம், மாயை, நிழல், குடை, சக்கர வடிவம்,சக்கரத்தின் சுற்றளவு, , விளையாடும் இடம், பெரிய அளவு,மொட்டை மாடி, மரங்களின் மேல் பரப்பு, காய்ந்த மரம்,ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கு, காபி கொட்டை, கயிறு, பாம்புகளின் இறைவன்,ஊழல், விபத்துகள், இரைப்பை தொல்லைகள், பாம்பின் வாய்.
கேதுதாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், ஆசனவாய், தாடி, மாடி படிக்கட்டு, புகைபோக்கி, பின் வாசல், குறுகிய சந்து (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம்,நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மண் பானை, காவி துணி, பிரம்மா,சமுத்திரம், மருத்துவமனைகள், பிரார்த்தனை கூடங்கள், மரங்களின் வேர், பாம்பின் வால், கயிறு, சங்கிலி, ஈனைய வலை, சாக்கடை, காய்ந்த புல், மூலிகைகள், யானை உடற்பகுதி, ஆலமரம், எழுதுதல், கொடி, இரகசியம், சர்ச்சை, வழக்கு, தடைகள்.


லக்னம் : துலாம்
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்.

திருமண கொடுப்பினைக்கு உண்டான முக்கிய பாவகம் 7. துணை பாவகங்கள் 2,5,11 (3,8,). எதிரான பாவகங்கள் 1,4,6,10,12.

ஒரு செயலுகுண்டான கொடுப்பினை:
 1. ஒரு செயலுகுண்டான முதன்மையான பாவ ஆரம்ப முனையின் உப அதிபதி அந்த செயலுகுண்டான சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டால் அந்த செயல் நடைபெறும்.
 2. சாதகமில்லா பாவங்களுக்கு மட்டும் தொடர்பு கொண்டால் , அந்த செயல் நடைபெறாது
 3. சாதகமான மற்றும் சாதகமில்லா பாவங்களை தொடர்பு கொண்டால் , தடையும், தாமதமும் ஏற்பட்டு அந்த செயல் நடைபெறும் அல்லது அல்லது செயல் நடைபெற்ற பின்னர் பாதகமான நிகழ்வுகளும் நடைபெறும்.
7ம் பாவகத்தை ஆளும் கிரகங்கள் : செவ்வாய், சுக்கிரன், சூரியன்

7ம் பாவ அதிபதி செவ்வாய்.
 • 2,7 க்குடைய செவ்வாய் 6ல்.
 • (இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மேலோட்டமாக பார்க்கும்போது செவ்வாய் 7ல் இருப்பது போல் தெரியும். ஆனால் டிகிரி சுத்தமாக ஆராயும்போது செவ்வாய் 2 டிகிரி 35 நிமிடத்தில் மேஷ ராசியில் இருக்கிரார். ஆனால் மேஷ ராசியில் விழும் 7ம் பாவகம் 15 டிகிரி 40 நிமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது. எனவே செவ்வாய் 6ல் இருப்பது உறுதியாகிறது.)
 • 7ல் யாருமில்லை.
 • செவ்வாயின் நட்சத்திரத்தில் யாருமில்லை. எனவே செவ்வாய் வலிமையாகிரார்.
 • செவ்வாய் புதனை நேரடி பார்வை. புதனின் நட்சத்திரத்தில் யாருமில்லை. புதனும் வலிமை.
 • செவ்வாய் கேதுவின் சாரத்தில். கேது 8ல் புதன் வீட்டில். கேது ராகுவின் சாரத்தில். ராகுவே உப அதிபதியும்.
 • 2ல் ராகு. ராகு கேதுவின் சாரத்தில். ராகுவே உப அதிபதியும்.
 • எனவே கேது வலிமையாகிரார். செவ்வாயின் வேலையை செய்வார்.
7ம் பாவ நட்சத்திர அதிபதி சுக்கிரன்.
 1. 1,8 க்குடைய சுக்கிரன் 3ல். சுக்கிரனின் சாரத்திலே. சனி, கேதுவின் பார்வை. சுக்கிரன் வலிமை ஆனால் சாதகமில்லா பாவங்களுடன் தொடர்பு.
 2. உப அதிபதி சந்திரன். 10க்குடையவர் 9ல்.
 3. 3ம் இடத்திலுள்ள 3,6க்குடைய குருவை பார்க்கிறார்.
7ம் பாவ உப நட்சத்திர அதிபதி சூரியன். (கொடுப்பினையை முடிவு செய்பவர்)
 1. 11க்குடையவர் 1ல். 2,7 க்குடைய செவ்வாய் பார்வை.
 2. சூரியன், 3,6க்குடைய குருவின் சாரத்தில். 3ல் குரு.
 3. உப அதிபதி சந்திரன். 10க்குடையவர் 9ல். 
 4. சாதகமான மற்றும் சாதகமில்லா பாவங்களை சூரியன் தொடர்பு கொள்கிறார். எனவே தடை மற்றும் தாமதமான திருமணம்.
எப்போது திருமணம்?

கேது மிக வலிமையாக உள்ளதால் கேது தசையில் உறுதியாக நடந்துவிடும். 

ஏன் குரு புக்தியில் நடைபெறவில்லை?
3,6க்குடைய குரு 3ல். 3ல் இருந்தாலும் 4ம் பாவத்திற்கு மிக மிக அருகில். 4ம் பாவ வேலையையும் செய்வார். 10க்குடைய சந்திரனின் நட்சத்திரத்தில். அந்த சந்திரன் 9ல் இருந்தாலும் 10ம் பாவத்திற்கு மிக மிக அருகில். 10ம் பாவ வேலையையும் செய்வார். சந்திரனின் பார்வை வேறு. 2ம் பாவத்தில் இருக்கும் ராகு, குருவின் உப அதிபதி. ராகு 8ல் இருக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் போகிறார். ராகுவே உப அதிபதி. 2ம் பாவம் இவ்வாறு பலவீனமாக சம்பந்தப்படுகிறது. 4,6,10 போன்ற பாவகங்களோடு வலிமையாக சம்பந்தப்படும் குரு அதன் சொந்த புக்தியில் நடத்தி வைக்க முடியாமல் இருக்கிறார்.

ஏன் சனி புக்தியில் நடைபெறவில்லை?
4,5க்குடைய சனி 8ல். ராகுவின் சாரத்தில். சனியே உப அதிபதியும்.
ராகு 2ல். 3,6க்குடைய குருவின் வீட்டில். குருவின் வேலையை செய்வார். மேலும் குரு 10க்குடைய சந்திரனின் நட்சத்திரத்தில். அந்த சந்திரன் 9ல் இருந்தாலும் 10ம் பாவத்திற்கு மிக மிக அருகில். 10ம் பாவ வேலையையும் செய்வார். சந்திரனின் பார்வை வேறு. 2ம் பாவம் காட்டினாலும் 4,6,10 வலிமையாக வருகிறது.
சனியே உப அதிபதியாக வருவதால் மறுபடி இந்த 4,6,10 வலிமையாக வருகிறது.
எனவே சனி அதன் சொந்த புக்தியில் நடத்தி வைக்க முடியாமல் இருக்கிறார்.

ஏன் புதன் புக்தியில் நடைபெற்றது?
 • 9,12க்குடைய புதன் லக்கினத்தில். ராகுவின் சாரத்தில். சந்திரன் உப அதிபதி.
 • புதனின் நட்சத்திரத்தில் வேறு கிரகங்கள் இல்லை. எனவே வலிமையான புதன்.
 • 2,7க்குடைய செவ்வாயின் நேரடி பார்வை. செவ்வாயின் நட்சத்திரத்திலும் வேறு கிரகங்கள் இல்லை. (வலிமையான புதனின் பார்வை வேறு) எனவே புதன் இன்னும் வலிமையாகிறார்.
 • 2ல் இருக்கும் ராகுவின் சாரத்தில் புதன். 3,6க்குடைய குருவின் வீட்டில். குருவின் வேலையை செய்வார். மேலே பார்த்ததுபோல் 4,6,10 வருகிறது. இருந்தாலும் 2,7க்குடைய வலிமையான செவ்வாய் பார்வை இருப்பதால் 4,6,10ன் வலிமை குறைகிறது.
 • மேலும் 9,10க்குடைய சந்திரன் உப அதிபதி. இந்த சந்திரன் மீது 2,7க்குடைய வலிமையான செவ்வாய் பார்வை. 
 • இங்கு 2,7 க்குடைய செவ்வாய் தனது ஆதிக்கத்தை தனது பார்வை மூலம் நிர்ணயிக்கிறார். தான் செய்ய வேண்டிய வேலையை தன் பார்வை மூலம் புதனை செய்யவைக்கிறார்.
 • நாம் மேலே பார்த்ததுபோல் புதன் வலிமையானவர். அவரின் நட்சத்திரத்தில் வேறு யாருமில்லை. மேலும் வலிமையான செவ்வாய் பார்வை வேறு. புதன் 2ம் இடத்தின் வலிமையான குறிகாட்டி. எனவே புதன் திருமணம் நடத்தி வைப்பார்.
திருமணம் நடந்தது - 6.6.2002
 • கேது தசை
 • புதன் புக்தி
 • குரு அந்தரம்
கேது தசை 19.8.1995 முதல் 19.8.2002 வரை.
புதன் புக்தி 23.8.2001 முதல் 19.8.2002 வரை.

ஜோதிடம் ஓர் அறிமுகம்

ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். வேதத்தை ஒரு மனித உருவமாக உருவகப்படுத்தினால் அதனுடைய கண், ஜோதிடம் எனப்படும்.

ஜெனனி ஜென்ம செளக்யானம்
வர்தனி குல சம்பதாம்
பதவி பூர்வபுன்ணியானம்
லிக்யதே ஜென்ம பத்திரிக்கா

முன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் பயனில் தான் பிழைப்பு ஏற்படுகிறது. நம்முடைய பூர்வ புன்னியம் தான் இப்பிறவியல் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு காரணமாய் அமைகிறது. நாம் செய்கின்ற வினைகளே நமக்கு அடுத்தப் பிறவியைத் தோற்றவிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.

ஜோதிஷத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

உலகின் மிக பழைமையானதும் பலவித ஆய்வுக்குப்பட்டு வருவதே இந்திய ஜோதிஷவியல் ஆகும். ஜோதிஷம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஜோ மற்றும் திஷ ஒளியின் படிப்பு என்று பொருள்.

நமது வாழ்வில் விதி தந்த பலனால் எவ்வழியில் சென்றால் வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதை சிந்தித்துச் செயல்பட தூண்டுவதே ஜோதிஷம். இதற்கு காரணம் யோகமும், காலமும், நேரமுமாகும். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில கிரகங்களின் சேர்க்கையால். பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடை பெறும் தசாபுத்தி அந்தரம் யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோசார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும். இம்மூன்றும் யோகமான நிலையில் அமையுமானால் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும். நினைத்ததெல்லாம் நடைபெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அப்படி இல்லையென்றால் பலன்கள் மாறுபாடாக அமையும்.

ஜோதிஷம் சித்தாந்த பாகம் (கணித பாகம்) பலித பாகம் (பலன் கூறும் பாகம்) என இரு பெரும் பிரிவுகளை உடையது. ஜோதிஷவியலுக்கு முன்னோடியாக கருதப்படும். 18 ரிஷிகள் ஜோதிஷ வளர்ச்சிக்கு மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது. 18 முனிவர்களும் 18 சித்தாந்தகளை அளித்துள்ளார்கள்.
ஜோதிஷச் சாஸ்திரம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவை கணிதம், சம்ஹிதா, ஹோரா ஆகியவை ஆகும்.

வேதம் ஆறு அங்கங்களை உடையது. அவை யாவன:
1. ஜோதிஷம் – கண்களையும்
2. கல்பம் – கைகளையும்
3. நிருத்தம் – காதையும்
4. சிட்சை – மூக்கையும்
5. வியாகரணம் – முகத்தையும்
6. சந்தஸ் –கால் பாத்தையும் குறிக்கும்.

வேதத்தின் கண்களாக விளங்குவது ஜோதிஷம் ஆகும்.

ஜோதிஷம் மூன்று பிரிவுகள் :

1. கணித ஸ்கந்தம் : கோளங்கள் பற்றியும், கணிதம் பற்றியும்,
2. ஹோரா ஸ்கந்தம் : ஜாதகம், ப்ரசன்னம், சகுனம், நிமித்தம்,
முகூர்த்தம் பற்றியும்,
3. சம்ஹிதா ஸ்கந்தம்: சகுனம், வானிலை, மழை, விலங்குகள்
பற்றியும், விவரிக்கின்றன.

ஜோதிஷம் ஆறு அங்கங்களைக் கொண்டது:

1. கணிதம் : கிரகங்களின் இருப்பிடம் நகர்தல் போன்றவை
பற்றிய கணக்கீடுகள்
2. கோளம் : கோள வடிவில் உள்ள கிரகங்கள் அவற்றின் சுழற்சி
பற்றியது,
3. ஜாதகம் : பிறந்த நேரத்து கிரக அடிப்படையில் கணித்து
பரிசீலித்துப் பலன் சொல்வது.
4. ப்ரசன்னம் : ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு விடையை அந்த
நேரத்து கிரக நிலையை வைத்து பதிலளிப்பது.
5. முகூர்த்தம்: எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது
இருக்கும் கிரக நிலையை குறிப்பது.
6. நிமித்தம் : சகுனங்கள் உடல் அசைவுகள், மனிதனின்
நடத்தைகள், விலங்குகள், மற்றும் இயற்கை
நிகழ்வுகள்.

மனிதன் தன் பரம்பரை மற்றும் வளரும் சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாகச் சொல்லுவதுண்டு. ஆனால் ஜோதிஷ சாஸ்திரம் இவன் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கிரகங்களே நமது வாழ்நாளின் அடிப்படை சக்திகள். அவையே நம்மை இயக்குகின்றன இந்த கிரகங்கள் தாம் இருக்கும் நிலை பொருத்தும், தங்களுக்குள் உள்ள தொடர்புகள் பொருத்தும் பல்வேறு சக்திகளைப் பெறுகின்றன. இவை ஒன்று சேர்ந்து நடத்தும் வழியிலேயே வாழ்க்கை நடக்கிறது.